கூடுதலாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி சாவு
கூடுதலாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி இறந்தார்.
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் இந்திராணி (வயது 69). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கடந்த 13 ஆண்டுகளாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் உடல் உபாதை அதிகரித்ததால் கூடுதலாக 2 மாத்திரைகளை சாப்பிட்டார். இதனால் அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.