கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் பலி
கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் பலியானார்.
சூரமங்கலம்:
சேலம் சித்தனூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் (வயது 29). என்ஜினீயரான இவர் ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோபிநாத், புதுரோடு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது மதுபோதையில் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத்தின் நண்பர்கள் உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரம் போராடி கோபிநாத்தை பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.