கைதானவர்களின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடி விசாரணை

விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பவத்திற்கு ெதாடர்புடைய இடங்களிலும், கைதானவர்களின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2022-03-26 19:57 GMT
விருதுநகர், 
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பவத்திற்கு ெதாடர்புடைய இடங்களிலும், கைதானவர்களின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பாலியல் பலாத்கார வழக்கு 
விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தென் மாவட்டங்களில் உள்ள  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள், விருதுநகருக்கு வரவழைக்கப்பட்டு 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று 2-வது நாளாக சம்பவம் நடந்ததாக கூறப்படும் பெத்தனாட்சி நகரில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் செல்போன்கள் மூலம் வீடியோ காட்சிகள் பரப்பப்பட்ட நிலையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இ்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஹரிஹரனின் பால் பண்ணையிலும் ஆய்வு நடத்தப்பட்டது 
போலீசார் விசாரணை 
இந்த வீடியோ காட்சிகள் வேறு யாருக்கேனும் பரப்ப பட்டுள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, ஜான் கென்னடி, சாவித்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்