காதல் ஜோடியை மிரட்டி தங்க சங்கிலி- செல்போன் பறிப்பு

சிறுகனூர் அருகே காதல் ஜோடியை மிரட்டி தங்க சங்கிலி, செல்ேபான் பறித்த 4 பேர் பிடிபட்டனர்.;

Update: 2022-03-26 19:32 GMT
சமயபுரம், மார்ச்.27-
சிறுகனூர் அருகே காதல் ஜோடியை மிரட்டி தங்க சங்கிலி, செல்ேபான் பறித்த 4 பேர் பிடிபட்டனர்.
காதல் ஜோடி
சிறுகனூர் அருகே  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை கொணலையில் உள்ள மலைமாதா கோவில் அருகே அமர்ந்து நேற்று ஒரு காதல் ஜோடி  பேசிக் கொண்டிருந்தனர்.
இதை கண்ட 4 பேர் கொண்ட கும்பல் காதலர்களை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலி, செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து காதலர்கள் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
4 பேர் பிடிபட்டனர்
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காதல் ஜோடியிடம்  நகை மற்றும் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.  தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலர் லால்குடி அருகே உள்ள வெள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், காதலி சமயபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. காதலர்களை மிரட்டி சங்கிலி மற்றும் செல்போனை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்