சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு

சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-03-26 19:23 GMT
சாயல்குடி,

சாயல்குடி பேரூராட்சி தேர்தலில் தலைவராக மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டார்.அன்றைய தினம் துணைத்தலைவர் தேர்தலில் கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் சாயல்குடி பேரூராட்சி 13-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட மணிமேகலை பாக்கியராஜ் மட்டுமே துணைத்தலைவர் தேர்தலில் மனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் தேர்தல் அலுவலரும் செயலாளருமான சேகர் விஜய், வேட்பாளர் மணிமேகலை பாக்கியராஜ் வெற்றி பெற்றவராக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சாயல்குடியில் உள்ள காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலை, வி.வி.ஆர். நகரில் உள்ள தலைவர் காமராஜர் சிலைக்கும் வெற்றி பெற்ற துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வெற்றி பெற்றவருக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சேகர், கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்