மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-26 19:16 GMT
நொய்யல், 
கந்தம்பாளையம் தேர்வீதி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48), விவசாயி. இவர் புகழூரில் உள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் தண்ணீர் பாய்ச்சி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்