அதிகாரிகளை மிரட்டிய 4 பேர் கைது
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பேத்கர் புகைப்படத்தை மாட்டினர்
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 24-ந் தேதி மாலையில் சிலர் சென்று டாக்டர் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி புகைப்படம் மாட்டக் கூடாது என கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் அதை மீறி அங்கிருந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி அவர்கள் மேஜை மீது இருந்த ஆவணங்களை கீழே தள்ளிவிட்டு டாக்டர் அம்பேத்கரின் படத்தை மாட்டி மாலை அணிவித்தனர். மேலும் அலுவலக ஊழியர்களை அழைத்து புகைப்படத்திற்கு முன்பு நின்று புகைப்படம் எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
4 பேர் கைது
இது குறித்து தனி தாசில்தார் கணேசன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்த ஜான், நாசர், அழகு, பிரான்சிஸ் எபினேசர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.