வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-03-26 19:08 GMT
நொய்யல், 
பூ விவசாயிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நடையனூர், பேச்சிப்பாறை, கொங்கு நகர், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து உள்ளனர்.
இந்த பூக்களை தொழிலாளர்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,200-க்கும், முல்லை ரூ.1,200-க்கும், காக்கட்டான் ரூ.1,300-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது.நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.450-க்கும், காக்கட்டான் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.120-க்கும், முல்லை ரூ.450-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளதால்  விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்