ஆம்பூர் நகரமன்ற தலைவராக ஏஜாஸ் அஹமத் போட்டியின்றி தேர்வு

ஆம்பூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஏஜாஸ்அகமது வெற்றிபெற்றார். துணை தலைவர் தேர்தலிலும் தி.மு.க.வை சேர்ந்த எம்.ஆர்.ஆறுமுகம் வெற்றி பெற்றார்.

Update: 2022-03-26 19:06 GMT
ஆம்பூர்

ஆம்பூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஏஜாஸ்அகமத் வெற்றிபெற்றார். துணை தலைவர் தேர்தலிலும் தி.மு.க.வை சேர்ந்த எம்.ஆர்.ஆறுமுகம் வெற்றி பெற்றார்.

நகர்மன்ற தலைவர் தேர்தல் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளிலும், அ.தி.மு.க.5 வார்டுகளிலும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தன. 5 சுயேச்சைகளும் வெற்றி பெற்று இருந்தனர். கடந்த 4-ம் தேதியன்று நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலா அறிவித்தார். 

இந்நிலையில்  தமிழகத்தில் ஒத்திவைத்த தேர்தல் மார்ச் 26 -ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆம்பூரில் நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. 
ேதர்தலை ஆம்பூர் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷகிலா நடத்தினார். இதில் தலைவர் பதவிக்கு 16-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏஜாஸ் அகமத் மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் மனுதாக்கல் செய்யாததால் ஏஜாஸ்அகமது நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனையடுத்து ஏஜாஸ் அகமத் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

துணை தலைவர் தேர்தல்

அதனைத் தொடர்ந்து பிற்பகலில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
இதில் 14-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் எம்.ஆர்.ஆறுமுகம் வெற்றி பெற்றார். பின்னர் அவர் துணை தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்