ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றம்
திருப்பத்தூர், கந்திலி பகுதி ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருப்பத்தூர்
ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைன தொடர்ந்து திருப்பத்தூர், கந்திலி, பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஏரி, குளம் குட்டை கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்தவர்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றுமாறு
உத்தரவிட்டனர்.
ஆனால் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறையினர் லக்கிநாயக்கன்பட்டி, குனிச்சி, சின்னகுனிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள குனிச்சி ஏரி, சின்ன குனிச்சிஏரி, உள்ளிட்ட ஏரிகளில் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யப்பட்ட தக்காளி, பருத்தி, துவரை, பயிர்கள், கீரை வகைகள், வெண்டை, கத்திரி, ஆகிய பயிர்களை அகற்றினர்.
கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டது.