மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தேவிபட்டிணம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.;
ராமநாதபுரம்,
தேவிபட்டிணம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் கல்யாணகுமார் (வயது34). இவர் ராமநாதபுரம் வந்து நண்பர்களை சந்தித்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே கேணிக்கரை பகுதியில் மரக்கடை அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் ரோட்டின் ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்து கீழே கிடந்த அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தம்பி வெங்கடேஷ் (30) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.