1032 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்

1032 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை அமைச்சா் வழங்கினாா்.

Update: 2022-03-26 18:34 GMT
திருக்கோவிலூர், 

முகையூர் ஒன்றியத்தில் உள்ள ஆயந்தூர், முகையூர், சித்தாத்தூர், கண்டாச்சிபுரம், வீரபாண்டி, தேவனூர், அரகண்டநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மொத்தம்1032 பேருக்கு ரூ.5 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீரபாண்டியில் நடைபெற்ற விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், அ.சா.ஏ.பிரபு, எம்.ஆர். ராஜீவ்காந்தி, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளரும், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான ஜே.நடராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ராஜன்பாபு, கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் கள அலுவலர் சிவனேசன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழையும், நகைகளையும் வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றியக்குழு துணை தலைவர் மணம்பூண்டி பி. மணிவண்ணன், ஒன்றிய அவைத்தலைவர் முருகதாஸ், தி.மு.க. நிர்வாகிகள் சக்திசிவம், ராஜசேகரன், முருகன், பிரபு, கூட்டுறவு சங்க தலைவர் பழனி, துணை தலைவர் தங்க.கோவிந்தன், திருக்கோவிலூர் இ.அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வீரபாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்