பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
திருத்துறைப்பூண்டி;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புகழ்பெற்ற முள்ளாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பெரியாச்சி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மனாக கருதப்படுகிறது.
முள்ளாட்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியாச்சி அம்மன் சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலையிலிருந்து சாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு படையலும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன், தலைமை பூசாரி ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.