தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்;

Update: 2022-03-26 18:25 GMT
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்.இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 25). குடும்ப தகராறு காரணமாக கலைச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி புழுதிபட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்