புகையிலை தடுப்பு பணிகள்
அரசக்குழியில் புகையிலை தடுப்பு பணிகள் நடைபெற்றது.
கம்மாபுரம்,
கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புலிகேசியின் ஆலோசனையின் பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜன் தலைமையிலான சுகாதார குழுவினர் அரசக்குழி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள், புகையிலை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட விதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.