ஆற்காடு அருகே நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆற்காடு அருகே நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;
ஆற்காடு
ஆற்காடு அருகே நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆற்காடு அருகே குஞ்சரப்பந்தாங்கல் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து 3 பேர் நெல், கடலை, வெண்டை, முள்ளங்கி, சோளம், மிளகாய் பயிரிட்டிருந்தனர். நீர்நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
அதேபோல் ஏரி புறம்போக்கு நிலங்களை 3 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அவற்றையும் வருவாய் துறையினர் அகற்றினர்.