தென்னை விவசாயிகளுக்கு ஊடுபயிர்கள் வழங்கும் நிகழ்ச்சி
வண்டுவாஞ்சேரியில் தென்னை விவசாயிகளுக்கு ஊடுபயிர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தென்னை மர ஊடு பயிர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபாலன், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தோட்டக்கலை அலுவலர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஊடுபயிர்களான கோகோ மற்றும் மிளகு செடிகள் வழங்கப்பட்டது.