பாலக்கோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-26 17:54 GMT
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் நஞ்சுண்டன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது தாயாரிடம் தகராறு செய்து வந்தார்.  இதனால் அவர் தோட்டத்தில் குடிசை அமைத்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 24-ந் தேதி மாலை மது குடித்துவிட்டு நஞ்சுண்டன் வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து பார்த்த போது நஞ்சுண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், நஞ்சுண்டனின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்