மொட்டலூர் ஊராட்சியில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
மொட்டலூர் ஊராட்சியில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மொட்டலூர் பஞ்சாயத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மக்கள் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி உள்பட பலர் உடன் இருந்தனர்.