பென்னாகரம் பேரூராட்சி கூட்டம்

பென்னாகரம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-03-26 17:53 GMT
பென்னாகரம்:
பென்னாகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கீதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பென்னாகரம் பஸ் நிலைய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேலும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த வேண்டும். பென்னாகரம் வார சந்தையை மேம்படுத்த வேண்டும். முள்ளுவாடி ஏரியை தூர்வார வேண்டும். பேரூராட்சிக்கு 4 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுதவிர மத்திய, மாநில அரசுகளின் நிதியை பெற்று நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத சாக்கடை கால்வாய் பிரச்சினை, பழுதான மின்விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜரத்தினம் மற்றும் அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்