போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிலரங்கம்

போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிலரங்கம் நடந்தது.;

Update: 2022-03-26 17:53 GMT
வேலூர்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பான பயிலரங்கம் நேற்று நடந்தது. 

போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார்.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தற்போதைய சூழலில் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீசாருக்கு பெரும் பங்கு உள்ளது.

பெண்குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும். பெண்கள், பெண்குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்ளும் போலீசாருக்கு இந்த பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

இதில், போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி, அரசு வக்கீல் சந்தியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, ஓய்வுப்பெற்ற தடயவியல் உதவி இயக்குனர் பாரி, தடய மருந்தியல்துறை முதன்மை உதவி பேராசிரியர் கலைசெல்வி மற்றும் பலர் கலந்து கொண்டு போக்சோ தொடர்பான வழக்குகளை கையாளுவது, விசாரணை முறைகள் குறித்து பேசினார். 

பயிலரங்கில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்