கந்திகுப்பம் அருகே எலி மருந்தை தின்ற சிறுமி சாவு

கந்திகுப்பம் அருகே எலி மருந்தை தின்ற சிறுமி இறந்தார்.

Update: 2022-03-26 17:53 GMT
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள கொல்லூர் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவரது மகள் தனுஸ்ரீ (வயது 4). சிறுமி வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது வீட்டின் அருகே வாழை மரத்தை எலிகள் சேதப்படுத்துவதை தடுக்க எலி மருந்தை மரத்தின் அடியில் வைத்து இருந்தனர். இதை சிறுமி எடுத்து தின்று விட்டாள். இதில் மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தனுஸ்ரீ இறந்தாள். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்