வேப்பனப்பள்ளி அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் சாவு

வேப்பனப்பள்ளி அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயிகள் 2 பேர் இறந்தனர்.;

Update: 2022-03-26 17:53 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயிகள் 2 பேர் இறந்தனர்.
விவசாயிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிராமத்தை சேர்ந்தவர்கள் அம்சகிரி (வயது 45), ராஜா (30). விவசாயிகள்.
இந்த நிலையில்  நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மணவரனப்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது கங்கமடுகு பகுதியில் சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அம்சகிரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ராஜா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அம்சகிரி, ராஜா ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.

மேலும் செய்திகள்