கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-26 17:52 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் ராஜப்பா, சங்க தணிக்கையாளர் லோகநாதன், உதவி செயலாளர்கள் திருமால், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கோட்ட கண்காணிப்பாளர், கிழக்கு உட்கோட்ட ஆய்வாளர், மேற்கு உட்கோட்ட ஆய்வாளர், ஓசூர் கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தகாத வார்த்தையில் பேசுவதாக கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்