நாமக்கல் பள்ளிகளின் அருகே மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் பள்ளிகளின் அருகே மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உத்தரவின்பேரில் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் சிகரெட் விற்பனை சட்ட விரோதமாக நடைபெறுகிறதா? என திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பொது இடங்களில் சிகரெட் பிடித்த நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மளிகை கடைகளில் விற்கப்படும் உப்பு பாக்கெட்டில் அயோடின் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ராஜகணபதி, இளங்கோவன், அப்துல் ரஜின், பெரியசாமி, சங்கீத், நவீன், கவுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.