ஓசூரில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம்
ஓசூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குப்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து, நேற்று ஓசூரில், பாகலூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கூட்டரங்கில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி முன்னிலை வகித்தார். ஓசூர் மாநகர செயலாளர் நாராயணன் வரவேற்றார். இதில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பென்ஜமின், மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அப்துல் ரகீம் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி, கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், அக்ரோ தலைவர் ஹரி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அசோகா கிருஷ்ணவேணி ராஜி, குபேரன் என்ற சங்கர், சிவராமன் மஞ்சுநாத், ஜெயப்பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.வாசுதேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணை செயலாளர் மதன் நன்றி கூறினார்.
பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருடன் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது, விமர்சனத்திற்குரிய பொருளாகிவிட்டது. தேர்தலின்போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறினார்.