ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் பணி இடைநீக்கம்

ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-03-26 17:52 GMT
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் முருகேசன். இவர், தேர்வுநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர் ஊதிய உயர்வு சம்பந்தமான கோப்புகளை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்வதில் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இவர் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முருகேசனை நேற்று பணி இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்