ஜல்லிக்கட்டில் மாடுமுட்டியதில் 24 பேர் காயம்

தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடுமுட்டியத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-26 17:46 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடுமுட்டியத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையத்தில் சாத்தையா கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 600-க்கும் அதிகமான காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு ஏறத்தாழ 620 காளைகள் அனுமதிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளைப் பிடிப்பதற்காக சுமார் 240 வீரர்கள் பதிவு செய்தனர்.
24 பேர் காயம்
மாடுகளை பிடிக்க 50 பேர் வீதம் என சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மாடுகளை குறிப்பிட்ட தொலைவு வரை பிடித்து சென்றவர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ உள்ளிட்டவைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகள் முட்டியதில் 17 வீரர்கள், 7 பார்வையாளர்கள் உள்பட 24 பேர் காயமடைந்தனர். இவர்களில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையொட்டி அந்த பகுதியல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்