பெரியசெவலையில் 2 குடிசைகள் எரிந்து சேதம்

பெரியசெவலையில் 2 குடிசைகள் எரிந்து சேதம்

Update: 2022-03-26 17:45 GMT
திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ஆனந்தகோபால் மகன் ராமமூர்த்தி(70). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் குடிசை வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். நள்ளிரவு 12 மணியளவில் அவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென எரிந்த தீ அருகில் உள்ள அவரது மகன் ராதாகிருஷ்ணனின் குடிசைக்கும் பரவியது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 குடிசைகளும் உள்ளே இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்