தஞ்சையில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

தஞ்சையில் நடந்த மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Update: 2022-03-26 17:41 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் நடந்த மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நீச்சல் போட்டி
தஞ்சை மாவட்ட நீச்சல் கழகம் சார்பில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதன் தொடக்க விழாவிற்கு மணி முன்னிலை வகித்தார். மாவட்ட அக்வாடிக் அசோசியேசன் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
போட்டியை தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி அதிஷ்டராஜ் பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் சிவக்குமார், கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 6 பிரிவுகளாக நடைபெற்றது.
இதில் 7 வயதுக்குட்பட்டவர்கள், 8 முதல் 9 வயதுக்குட்பட்டவர்கள், 10 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவு என போட்டிகள் நடைபெற்றது.
பிரீ ஸ்டைல்- பட்டர்பிளை பிரிவு
இதில் 25 மீட்டர், 50 மீட்டர் பிரீ ஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பிரஸ்ட் ரோக், பட்டர்பிளை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீட்டர் பிரீ ஸ்டைல், 50 மீட்டர் பிரீ ஸ்டைல், 100 மீட்டர் பிரீ ஸ்டைல் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. முடிவில் நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்