அன்னதான உண்டியல் மூலம் ரூ.60 ஆயிரம் வசூல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.60 ஆயிரம் வசூல்
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் இங்கு அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பக்தர்கள் நன்கொைட வழங்க வசதியாக கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக 60 ஆயிரத்து 697 ரூபாய் வசூலாகி இருந்தது.