காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராக தீபிகா போட்டியின்றி தேர்வு
காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவராக தீபிகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவராக தீபிகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.8 வார்டிலும், அ.தி.மு.க.4 வார்டிலும், காங்கிரஸ் 1 ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 4-ம்தேதி காலை நடந்த தலைவர் தேர்தலும், மாலை துணை தலைவர் தேர்தலும் நடைபெற இருந்தன. இதில் தி.மு.க. சார்பில் லதாநரசிம்மன் மற்றும் தீபிகா முருகன் ஆகியோர் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது வேட்புமனு பூர்த்தி அடையவில்லை என தீபிகா முருகன் நிராகரிக்கப்பட்டது. இதனால் காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவராக லதாநரசிம்மன் போட்டி இன்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் மாலை மீண்டும் துணைத் தலைவர் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதில் போதிய பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சண்முகம் தலைமையில் மீண்டும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 13-வது வார்டு உறுப்பினர் தி.மு.க.தீபிகா முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். ேவறு யாரும் போட்டியிடாததால் தீபிகாமுருகன் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சக உறுப்பினர்களும் அலுவலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.