நகைக்கடன் தள்ளுபடி செய்யாத அதிகாரி மீது தாக்குதல்
உளுந்தூர்பேட்டை அருகே நகைக்கடன் தள்ளுபடி செய்யாத அதிகாரி மீது தாக்கிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருபவர் அமிர்தலிங்கம்(வயது 59). இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தக்போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த அம்மாசி மகன் மணிகண்டன்(42), இவரது சகோதரர் வெங்கடேசன், சுரேஷ்(32) ஆகியோர் அரசு உத்தரவுப்படி தங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். அதற்கு செயலாளர் அமிர்தலிங்கம், ஏற்கனவே மணிகண்டனின் தந்தை பெயரில் இருந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியது என்றும் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அமிர்தலிங்கத்தை ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சுரேசை கைது செய்தனர். மேலும் வெங்கடேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.