573 பேருக்கு திருமண நிதிஉதவி
புவனகிரியில் 573 பேருக்கு திருமண நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.
புவனகிரி,
கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் திருமண நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி புவனகிரியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், சமூக நலத்துறை அலுவலர் சித்ரா, புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 573 பயனாளிகளுக்கு திருமண நிதிஉதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் சபாநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், ராஜசேகர், சுகுமார், சிவஞானசுந்தரம், ராமச்சந்திரன் சீனிவாசன், கீரப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் தேவதாஸ் படையாண்டவர், தாசில்தார்கள் அன்பழகன், ஆனந்தன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் சண்முகம், நகரப் பொருளாளர் எழில்வேந்தன், இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புவனகிரி வட்டார சமூக நல அலுவலர் புஷ்பவல்லி நன்றி கூறினார்.