அரக்கோணம் தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரக்கோணம் தாலுகாவில் நீர்றநிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2022-03-26 17:22 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் தாலுகாவில் நீர்றநிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தில் ஓடை, குளம் பகுதிகளில் தனி நபர்கள் 10 ஏக்கர் பரப்பளவை  ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டிருந்தனர். இதேபோல் செய்யூர் கிராமத்தில் குட்டை பகுதியில் 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புகள் ஐகோர்ட்டு உத்தரவின்படி அகற்றும் பணி அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் தலைமையில் நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை தொடர்ந்து புது கேசாவரம் கிராமத்தில் கல்லாறு கரையோரம் சுமார் 6 ஏக்கரிலும், அனந்தாபுரம் கிராமத்தில் ஏரி பகுதியில் 6 ஏக்கரிலும் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டிருந்த எள் மற்றும் பச்சை பயிறு செடிகளும் அகற்றப்பட்டன.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சுந்தரம், பாராஞ்சி வருவாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்