மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்டம், உடற்கல்வித்துறை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் அறவாழி தலைமை தாங்கினார். இதில் இந்திய யோகா பேரியக்கத்தின் சார்பில் சுமிதா பங்கேற்று, யோகாசனங்களின் முக்கியத்துவத்தைக் கூறி மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார். தற்காப்பு கலை நிபுணர் கிருஷ்ணகுமார் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்தார். தொடர்ந்து நடந்த பரிசு வழங்கும் விழாவில் சிறப்பாக கலை பயின்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சிவயோகம், சித்ரலேகா, மலர்விழி, இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் புனிதா, உடற்கல்வி இயக்குனர் பானுப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.