திருப்பாற்கடல் குளக்கரை சீரமைக்கப்படுமா
திருப்பாற்கடல் குளக்கரை சீரமைக்கப்படுமா
மன்னார்குடி;
மன்னார்குடி திருப்பாற்கடல் குளக்கரை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருப்பாற்கடல்குளம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாமணி ஆற்றின் அருகே திருப்பாற்கடல்குளம் உள்ளது. மன்னார்குடியில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான இந்த குளம் சுமார் 3 ஏக்கருக்கு மேல் பரப்பளவு உடையது. செங்கமலத்தாயார் இங்கு தான் அவதரித்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த குளத்தின் கரைகளில் காசி விஸ்வநாதர்கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த குளத்தின் திருப்பாற்கடல் தெரு பகுதியில் உள்ள கரைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.
பாதுகாப்பு வேலி
இதனால் இக்குளத்தின் கரைகளிலும், குளத்துக்குள்ளும் குப்பைகளும், கழிவுகளும் நிறைந்து காணப்படுகிறது. எனவே குளத்தை சுற்றி நடைபாதை அமைத்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் கரைகளை சுற்றி இரும்பு கிரில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.