கோவில் பூட்டை உடைத்து விளக்குகள் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து விளக்குகள் திருட்டு

Update: 2022-03-26 16:53 GMT
கோவில் பூட்டை உடைத்து விளக்குகள் திருட்டு
கோவை

கோவை ஆத்துப்பாலம் ஆசாத் நகரில் சங்கிலி கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு பூஜை முடிந்ததும் பூசாரி ராஜேந்திரன் இரவில் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குசென்று விட்டார். அவர், மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது 2 குத்துவிளக்கு, 2 தொங்குவிளக்கு, 2 பித்தளை தட்டு, 2 மணி, 2 ஜோடி சலங்கை ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. 

இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜ் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்