விழுப்புரம்
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மலையரசன்குப்பத்தை சேர்ந்த சுமதி(வயது 37), ரஞ்சிதா(30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் செங்கமேடு, வசந்த கிருஷ்ணாபுரம், வடகரைத்தாழனூர் ஆகிய இடங்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கீரனூரை சேர்ந்த பொன்னம்பலம்(52), திருக்கோவிலூர் அருகே சாங்கியத்தை சேர்ந்த தேசிங்கு(48), ரவிச்சந்திரன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.