காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையை பெற சிறப்பு முகாம்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் வட்டம், வாலாஜாபாத் வட்டம், உத்திரமேரூர் வட்டம் பகுதியில் வசிப்பவர்களுக்கு வருகிற 29-ந்தேதியும், திருப்பெரும்புதூர் வட்டம், குன்றத்தூர் வட்டம் பகுதியில் வசிப்பவர்களுக்கு வருகிற 30-ந்தேதியும் நடைபெற இருக்கிறது. இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்திடாத மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.