லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

தூத்துக்குடி அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார்.

Update: 2022-03-26 16:02 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் நரேந்திரன் (வயது 35). இவர் ஸ்பிக்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலைக்காக தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நகருக்கு வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவரை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேந்திரன் பலியானார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்