ரூ3 கோடிக்கு பருத்தி ஏலம்

ரூ3 கோடிக்கு பருத்தி ஏலம்

Update: 2022-03-26 15:56 GMT
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 991 விவசாயிகள் கலந்துகொண்டனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். 
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.12,299-க்கும், குறைந்த பட்ச விலை ரூ.10,620-க்கும் சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக பருத்தி 8835 மூட்டைகள், குவிண்டாலுக்கு ரூ.2835.17. இந்த ஏலத்தில் ரூ.3 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 146-க்கு ஏலம் நடைபெற்றது. இதில் 24 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என்று முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார

மேலும் செய்திகள்