வக்கீல்களின் சேமநல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்

திருச்சி, மார்ச்.27-
அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் திருச்சி மண்டல மாநாடு மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்த வழக்கறிஞர்களுக்கு "சேவை ரத்னா" விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.
முன்னாள் நீதிபதி பூபாலன், காவல்துறை அதிகாரி பன்னீர்செல்வம், முன்னாள் நீதிபதி வைத்தியநாதன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்த வக்கீல்களுக்கு விருது வழங்கி பேசினர். மாநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வக்கீல்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநல நிதியை வழங்க வேண்டும். வக்கீல்களின் சேமநல நிதியை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க பார்கவுன்சிலை வலியுறுத்துவது.
வக்கீல்களின் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வக்கீல்கள் மீது போலீஸ்நிலையங்களில் பொய் வழக்குப் போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.