மணல்கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு

மணல்கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு

Update: 2022-03-26 15:00 GMT

விழுப்புரம்

விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், காவணிப்பாக்கம் ஏரிக்கரை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டாரஸ் லாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். உடனே டிரைவர் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்தலாரியை போலீசார் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்பட்டியை சேர்ந்த முருகானந்தம்(வயது 46) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்