கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-26 14:52 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பைபாஸ் ஜங்சன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பதும், அவரிடம் 1½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்