தட்டச்சு தேர்வு முறையை மாற்ற வேண்டும்

தட்டச்சு தேர்வு முறையை மாற்ற வேண்டும்

Update: 2022-03-26 14:09 GMT
குன்னூர்

தமிழக அரசின் தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்தும் தட்டச்சு தேர்வு, குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை 150 மாணவ-மாணவிகள் எழுதினர். ஆனால் தேர்வு முறையில் மாற்றம் செய்து உள்ளதால், சரியாக எழுத முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறும்போது, தட்டச்சு தேர்வில் முதல் கட்டமாக வேக தட்டச்சு தேர்வு செயல்முறையில் இருந்தது. 2-வது கட்டமாக ஸ்டேட்மெண்ட் மற்றும் கடிதங்கள் தட்டச்சு செய்யும் தேர்வு இருந்தது.

 ஆனால் தற்போது ஸ்டேட்மெண்ட் மற்றும் கடிதங்கள் தட்டச்சு செய்யும் தேர்வு முதல் கட்டமாக நடத்தப்படுகிறது. நேர குறைவு காரணமாக பதற்றத்துடன் தேர்வை எதிர்கொண்ட எங்களால் சரியாக எழுத முடியவில்லை. எனவே பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்