ஊட்டி
ஊட்டி மெயின் பஜாரில் பயன்படுத்தப்படாத ஒரு கட்டிடத்தில் தூக்கில் ஆண் பிணம் கிடப்பதாக ஊட்டி நகர மத்திய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பிரவீன் (வயது 24) என்பதும், குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து ஊட்டியில் கூலி வேலை செய்து வந்ததும், வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததும் தெரியவந்தது.
மேலும் அந்த கட்டிடத்தில் பிரவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மன அழுத்தத்தால் தற்கொலை கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.