வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி மையங்கள்
வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி மையங்கள்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக 201 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 20 நடமாடும் முகாம்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. அங்கு வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தடுப்பூசி செலுத்த சுற்றுலா பயணிகள் வராததால் முகாம்கள் வெறிச்சோடி இருந்தன. அதேபோல் பல முகாம்களில் செவிலியர்கள் தவிர பொதுமக்கள் குறைவாக வந்தனர். இதனால் மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்கனவே முதல், 2-வது டோஸ் செலுத்தி விட்டதால் முகாம்களுக்கு பொதுமக்கள் வர ஆர்வம் காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.