வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
திருச்சி, மார்ச்.27-
திருச்சி வரகனேரி குழுமி தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 53). மூலிகை மருந்து வியாபாரியான இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் வடக்கு தியாகராய தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடை அருகே நடந்து சென்றார். அப்போது, திருச்சி உறையூர் கமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்ற கோலமாவு குமார் (33), மதுரை மேற்கு தெரு மணிநகரம் பகுதியை சேர்ந்த சரவணன் (45), மதுரை மக்கான்தொப்பு மேலவாசிவீதி பகுதியை சேர்ந்த வேல்முருகன் (40) ஆகியோர் வழிமறித்து ரூ.500-ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.