விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 95). இவர், கண்பார்வை தெரியாமலும், காது கேட்காமலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். வீட்டில் இருந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து (விஷம்) மயங்கி கிடந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.